பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

vinoth

திங்கள், 30 டிசம்பர் 2024 (07:39 IST)
கோட் படத்தை அடுத்து ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்போது இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் மிஷ்கின் மற்றும் கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கடாயு லோஹர் ஆகியோர் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது படத்தின் ஆடியோ உரிமையை திங்க் ம்யூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். விரைவில் பாடல்கள் ரிலீஸாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. படம் காதலர் தினத்தன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்