அரசு ஹோட்டலை நான் விலைக்குக் கேட்டேனா?... விக்னேஷ் சிவன் விளக்கம்!

vinoth

திங்கள், 16 டிசம்பர் 2024 (07:34 IST)
நடிகை நயன்தாராவின் காதல் கணவரான விக்னேஷ் சிவன் ‘நானும் ரௌடிதான்’ என்ற ஒரே ஒரு வெற்றிப்படத்தை மட்டும் கொடுத்திருந்தாலும் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.  தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ப்ரதீப் ரங்கநாதன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.  இதில் எஸ் ஜே சூர்யா, சீமான் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றன. லலித்குமார் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விட்டு விட்டு நடந்து வரும் நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் பற்றி வெளியான தகவல் ஒன்று கவனத்தை ஈர்த்தது. பாண்டிச்சேரியில் உள்ள அரசுக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றை சுற்றுலாத்துறை அமைச்சரிடம் அவர் விலைக்குக் கேட்டதாக தகவல் வெளியானது.  அது சம்மந்தமாக அவரை ட்ரோல் செய்யும் மீம்களும் பரவின.

இப்போது அதற்கு விக்னேஷ் சிவன் பதிலளித்துள்ளார். அதில் “கடந்த சில நாட்களாக என்னைப் பற்றி வெளியான தகவல்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். அரசுக்கு சம்மந்தமான ஹோட்டலை நான் விலைக்குக் கேட்கவில்லை. என்னுடைய படத்துக்கு விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக் கேட்கவே சென்றேன். ஆனால் என்னுடன் வந்த மேனேஜர் நான் சென்ற பிறகு இது சம்மந்தமாக ஏதோ பேசியுள்ளார். அதை என்னுடன் தொடர்புபடுத்தி இதுபோல செய்தி வெளியிட்டுள்ளனர். மீம்கள் பார்க்க நகைச்சுவையாக இருந்தாலும் அதில் உண்மை இல்லை” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்