செம்ம ஆட்டம் போட்ட கௌதம் மேனன்… கவனம் ஈர்க்கும் ‘தி ரைஸ் ஆஃப் டிராகன்’ பாடல்!

vinoth

வெள்ளி, 3 ஜனவரி 2025 (07:44 IST)
கோட் படத்தை அடுத்து ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பெரும்பாலானக் காட்சிகளுக்கான ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. படத்தில் மிஷ்கின் மற்றும் கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கடாயு லோஹர் ஆகியோர் நடிக்கின்றனர். படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் முதல் பாடலாக ‘தி ரைஸ் ஆஃப் டிராகன்’ நேற்று வெளியானது. இந்த பாடல் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. கல்லூரி முடித்த ஒரு மாணவன் வேலைக்கு சென்று தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டு சாதிப்பது போல அந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலில் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்த அம்சமாக இயக்குனர் கௌதம் மேனன் ப்ரதீப்போடு இணைந்து செம்ம ஆட்டம் போட்டுள்ளதுதான். இந்த படத்தில் அவரும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்