போர்த் தொழில் படத்தின் தெலுங்கு ரீமேக்… வலைவிரிக்கும் அல்லு அர்ஜுன்!

Webdunia
ஞாயிறு, 25 ஜூன் 2023 (08:37 IST)
அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து விக்னேஷ் ராஜா இயக்கிய திரைப்படம் போர்த் தொழில். சில வாரங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று இந்த ஆண்டின் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது.

இதையடுத்து கடந்த இரண்டு வாரங்களாக தமிழக திரையரங்குகளில் வெற்றிப் படமாக வலம் வருகிறது போர் தொழில். கிட்டத்தட்ட 5 கோடியில் தயாரான இந்த திரைப்படம் 30 கோடி ரூபாய் அளவுக்கு திரையரங்குகள் மூலம் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கான ரீமேக் டிமாண்ட் உருவாகியுள்ளது. தெலுங்கில் இதை தன்னுடைய நிறுவனத்துக்காக வாங்கி ரீமேக் செய்ய அல்லு அர்ஜுன் ஆசைப்படுவதாகவும், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்