ரசிகர்கள் கொண்டாடிய போர் தொழில்…. கலெக்‌ஷன் இத்தனை கோடியா?

வியாழன், 22 ஜூன் 2023 (11:38 IST)
அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள திரைப்படம் போர்த் தொழில். நேற்று ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இதையடுத்து கடந்த இரண்டு வாரங்களாக தமிழக திரையரங்குகளில் வெற்றிப் படமாக வலம் வருகிறது போர் தொழில். கிட்டத்தட்ட 5 கோடியில் தயாரான இந்த திரைப்படம் அதைவிட பல மடங்கு திரையரங்கு மூலமாகவே வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இரண்டு வாரங்களில் போர் தொழில் திரைப்படம் 12 கோடி ரூபாயை தயாரிப்பாளரின் பங்காக ஈட்டியுள்ளதாம். இது தவிர ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமைக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுவதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்