போர் தொழில் அதிரி புதிரி ஹிட்.. திரில்லர் ஜானரிலேயே அடுத்த படம் இயக்கப்போகும் இயக்குனர்!

புதன், 14 ஜூன் 2023 (07:49 IST)
அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள திரைப்படம் போர்த் தொழில். நேற்று ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படம் முடிந்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கழித்து ரிலீஸ் ஆனாலும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.

படம் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றதும், தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் திரைகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா தன்னுடைய அடுத்த படம் பற்றி பேசியுள்ளார்.

அதில் “ரசிகர்களிடம் இருந்து இப்படி ஒரு வரவேற்புக் கிடைக்கும் என நினைக்கவில்லை. பலரும் போன் செய்து பாராட்டி வருகிறார்கள். அடுத்த படமும் இதே போல திரில்லர் பாணியில்தான் இயக்க உள்ளேன்.” எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்