ஹாலிவுட்டுக்கு செல்கிறதா பார்த்திபனின் ஒத்த செருப்பு திரைப்படம்?

vinoth
வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (12:18 IST)
பார்த்திபன் இயக்கி, தயாரித்து அவர் மட்டுமே நடித்த ஒரு படம் தான் 'ஒத்த செருப்பு. உலகிலேயே ஒரு படத்தை ஒருவரே இயக்கி, தயாரித்து நடித்த ஒரு திரைப்படம் என்ற பெருமையை இந்த 'ஒத்த செருப்பு' திரைப்படம் பெற்றது. ஆனாலும் இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களைக் கவரவில்லை.

அதற்குக் காரணம் படத்தில் இடம்பெற்ற பிற்போக்கான கருத்துகள்தான் என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்த படத்தை இப்போது ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் ரீமேக்கில் ஹாலிவுட் நடிகரான டென்சில் வாஷிங்டன் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது சம்மந்தமானப் பேச்சுவார்த்தை கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் நடந்ததாகவும் இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த படத்தை இந்தியில் அபிஷேக் பச்சன் நடிப்பில் பார்த்திபன் ரீமேக் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்