30 ஆண்டுகள் நிறைவு… மீண்டும் ரிலீஸாகும் The GOAT பாட்ஷா!

vinoth

வியாழன், 17 ஜூலை 2025 (08:29 IST)
தமிழ் வனிகா சினிமாவின் மைல்கல் படம் என்றால் அது ரஜினி நடித்த பாட்ஷா என்று சொல்வதில் மிகையில்லை. பாட்ஷாவுக்குப் பிறகு அதுபோல பல படங்கள் வெளியாகின. இந்தப்படம் அமிதாப் நடித்த இந்திப் படத்தின் தழுவல் ஆகும். இந்தப் படத்தை ஒரிஜினலை விட சிறப்பாக இயக்கி ரஜினியின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு சென்றவர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.

இந்த படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழ்நாட்டில் ரஜினிக்கு அரசியல் இமேஜை உருவாக்கியதில் இந்த படம் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது. இந்த படத்தின் பாதிப்பில் அதன் பிறகு நூற்றுக்கணக்கான கமர்ஷியல் படங்கள் பல மொழிகளில் உருவாகின.

இந்நிலையில் இந்த படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து பாட்ஷா திரைப்படம் நாளை குறிப்பிட்ட தியேட்டர்களில் மட்டும் ரி ரிலீஸாகவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்