என்னிடம் வேலை செய்பவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புக் கிடைப்பதில்லை! பா ரஞ்சித் ஆவேசம்!

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (09:48 IST)
இயக்குனர் பா ரஞ்சித் தயாரித்துள்ள ரைட்டர் திரைப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இயக்குனர் பா ரஞ்சித் அவர் படங்களில் பேசும் அரசியலுக்காக தனித்துக் கவனிக்கப்படுகிறார். அதுமட்டுமில்லாமல் நீலம் புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் மூலம் தன்னுடைய உதவியாளர்கள் மற்றும் நண்பர்கள் படத்தையும் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தயாரித்து டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாக உள்ள ரைட்டர் படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பா ரஞ்சித் பேசும்போது ‘என்னுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றால் என்னுடைய அரசியலைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதை தெரிந்துகொண்டு என் அலுவலகத்துக்கு வருவதற்கே ஒரு தில் வேண்டும். என்னுடன் பணியாற்றும் கலைஞர்களுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. என்னுடன் பணியாற்றுவதாலேயே அவர்கள் புறக்கணிக்கபடுகிறார்கள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்