என் படத்தில் பணிபுரியும் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் மறுப்பு- பா.ரஞ்சித்

திங்கள், 20 டிசம்பர் 2021 (16:21 IST)
தன் படத்தில் தன்னுடன் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக  இயக்குநரும் தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுஅக் ம் ஆனவர் பா.ரஞ்சித். இவர் மெட்ராஸ், கபாலி, காலா, சர்பாட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். பரியேறும் பெருமாள், ரைட்டர் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

பா. ரஞ்சித்-ன்நீலம் புரடெக்சன் சார்பில் தயாரித்துள்ள படம் ரைட்டர். இப்படத்தில் சமுத்திரகனி ஹீரோவாக நடித்துள்ளார். நடிகை இனியா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் வரும் 24 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளாது

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடந்தது., இந்நிலையில், பா.ரஞ்சித்  தன் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் முதல் நடிகர்கள் வரை அனைவரும் என்னைப் போன்று சிந்திப்பார்கள் என அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்