தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் சமுத்திரகனி. இவர் சுப்பிரமணியபுரம், காப்பான்,ரஜினி முருகன், சாட்டை உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தற்போது, பா. ரஞ்சித்-ன்நீலம் புரடெக்சன் சார்பில் தயாரித்துள்ள படம் ரைட்டர். இப்படத்தில் சமுத்திரகனி ஹீரோவாக நடித்துள்ளார். நடிகை இனியா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் வரும் 24 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளாது,
இந்நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது,. இதில், நடிகை இனியா பேசும்போது, இப்படத்தின் கதையை இயக்குநர் பிராங்ளின் சொல்லும் போது, ரைட்டர் படத்தின் ஹீரோ சமுத்திரகனி எனத் தெரியாது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் தான் அவர் ஹீரோ எனத் தெரியும் என்று கூறினார். மேலும், பா.ரஞ்சித் இயகக்தில் முழு படத்தில் நடிக்க ஆசை என தெரிவித்துள்ளார்.