ஒரு காட்சி மட்டுமே கூடுதலாக அனுமதி: சர்கார் அதிகாலை காட்சிக்கு ஆப்பு

Webdunia
ஞாயிறு, 4 நவம்பர் 2018 (20:26 IST)
விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தை அதிக காட்சிகள் திரையிட ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அதிகாலை 4.30 காட்சிக்கான டிக்கெட்டுக்களும், காலை 8 மணி காட்சிக்கான டிக்கெட்டுக்களும் சென்னை உள்பட பல திரையரங்குகளில் விற்பனையாகிவிட்டது.

இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளித்து அரசாணை சற்றுமுன் வெளியாகியுள்ளது. அந்த ஆணையில் நவம்பர் 7,8,9 ஆகிய தேதிகளில் கூடுதலாக ஒரு காட்சியை ஒளிபரப்பலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக 4 காட்சிகள் திரையிடும் திரையரங்குகள் கூடுதலாக ஒரு காட்சியை மட்டுமே திரையிடலாம்

அப்படியென்றால் அதிகாலை 4 மணி காட்சி திரையிட அனுமதி இல்லை என்றே அர்த்தம். அதிகபட்சமாக காலை 8 மணிக்கே காட்சிகள் ஆரம்பமாகும் என்பதால் ஓப்பனிங் வசூல் பெருமளவில் பாதிக்கும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்