துருவ நட்சத்திரம் ரிலீஸாகும்வரை வேறு எந்த படமும் கிடையாது… கௌதம் மேனன் உறுதி!

vinoth

வியாழன், 12 ஜூன் 2025 (12:55 IST)
கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக  2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல பிரச்சனைகளைக் கடந்து கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 24  ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் ஆகவில்லை.

இப்போது வரை அந்த படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் அந்த படம் ரிலீஸாகாததால் சமூகவலைதளங்களில் ஒரு ட்ரோல் மெட்டீரியலாகவே மாறியுள்ளது. ஆனாலும் சமீபத்தில் ‘மத கஜ ராஜா’ திரைப்படம் 12 ஆண்டுகள் கழித்து ரிலீஸாகியும் வெற்றி பெற்றதால் இந்த படத்தின் மீது நம்பிக்கை உள்ளதாக கௌதம் மேனன் கூறியுள்ளார்.

இப்போது படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளார் கௌதம் மேனன். இதுபற்றி பேசும்போது “படத்தை முடித்து முதலீட்டாளர்களிடம் காட்டியுள்ளேன். அவர்களுக்குத் திருப்தியாக அமைந்துள்ளது. படத்தின் மீதான சட்ட சிக்கல்களை தீர்த்துவிட்டு ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் படத்தை ரிலீஸ் செய்யவுள்ளோம். துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்துவிட்டுதான் அடுத்த பட வேலைகளைத் தொடங்குவேன். இப்போதைக்கு எந்த படத்திலும் நடிக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்