நிவின்பாலி கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் இயக்குநர்கள்

Webdunia
வெள்ளி, 5 மே 2017 (15:22 IST)
நிவின்பாலியை வைத்துப் படம் எடுக்க, தமிழ் சினிமா பல பேர் அவரிடம் கால்ஷீட் கேட்டு காத்திருக்கிறார்கள்.

 
 
மலையாளத்தின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நிவின் பாலி. தமிழில் ‘நேரம்’ படம் மூலம் அறிமுகமான இவருக்கு, தமிழிலும் கணிசமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால், அவர் நடித்த ’பிரேமம்’ படத்தைப் பார்த்த பிறகு, மலர் டீச்சருக்கு இணையாக நிவின் பாலிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இத்தனைக்கும் மலையாளத்தில் தான் ரிலீஸானது இந்தப்  படம். 
 
எனவே, நிவின் பாலியை நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்கவைக்க பலரும் முயற்சி எடுத்து வருகின்றனர். அதில், முதல் லக், கெளதம் ராமச்சந்திரனுக்கு அடித்திருக்கிறது. அறிமுக இயக்குநரான இவரின் ‘ரிச்சி’ படத்தில் நடித்துள்ளார் நிவின் பாலி. தூத்துக்குடி தாதாவாக அவரும், படகில் உள்ள மோட்டார்களை ரிப்பேர் செய்பவராக நட்டியும் நடித்துள்ளனர். 
 
இந்தப் படத்தின் டீஸர், சமீபத்தில் ரிலீஸானது. குறுகிய காலத்திலேயே ஏழு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்துள்ளது இந்த டீஸர். இதனால், முன்னணி இயக்குநர்களும் நிவின் பாலியை இயக்க கால்ஷீட் கேட்டு வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்