அட்லீ இயக்குனர் என்பதை தாண்டி தற்போது தயாரிப்பாளராகவும் பிஸியாக உள்ளார். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் A for Apple.
தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் அட்லீ முதலில் தயாரித்த படம் சங்கிலி புங்கிலி கதவ தொற. படத்தின் ஆடியோ வெளியீட்டு அண்மையில் நடைபெற்றது.
இப்படத்தை தொடர்ந்து அட்லீ, நிவின் பாலியை வைத்து ஒரு படம் தயாரிக்க இருந்தார். அதற்காக அவரிடம் கால்ஷீட் எல்லாம் வாங்கிவிட்டார்.
ஆனால் நடுவில் சில காரணங்களால் நிவின்பாலி படத்தையே மறந்துவிட்டார் அட்லீ. இதனால் கடுப்பான நிவின்பாலி மறுபடியும் கால்ஷீட் கேட்க போனால் படக் குழுவினரை திருப்பி அனுப்புகிறாராம்.