தனுஷை இயக்குகிறாரா மகாராஜா பட இயக்குனர் நித்திலன்?

vinoth
புதன், 28 ஆகஸ்ட் 2024 (15:35 IST)
விதார்த், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் உருவான குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் நித்திலன். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்து அவர் நயன்தாரா நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் அந்த படம் தொடங்குவதில் தாமதம் ஆகிக்கொண்டே இருந்ததால் அவர் தன்னுடைய அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கினார்.

அப்படி அவர் இயக்கிய  மகாராஜா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூலைக் குவித்து வருகிறது. நெட்பிளிக்ஸில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் நித்திலன் நயன்தாராவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அதற்கு முன்பாக நித்திலன் சமீபத்தில் தனுஷை சந்தித்து அவருக்கு ஒரு கதை சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த கதை தனுஷுக்கு பிடித்துவிட அதற்கான வேலைகளையும் நித்திலன் தொடங்கியுள்ளாராம். இதனால் அவர் தனுஷ் படத்தை முதலில் தொடங்குவாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்