என் குரல் மீது தமிழ் ரசிகர்களுக்கு தனி அன்பு… மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பி. சுசீலா நெகிழ்ச்சி!

vinoth

செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (09:20 IST)
தேனில் எந்தத் துளி தித்திப்பு என்று கேட்டால் எப்படி பதில் சொல்ல முடியும்.. அப்படித்தான் பாடகி பி. சுசீலா அவர்களின் அத்தனை பாடல்களும் கேட்பவர்களுக்கு தேன் துளிகள் போன்றது.

1950 களில் இருந்து பாடல்கள் பாடி வந்த சுசீலா 70 கள் மற்றும் 80 களில் தன்னுடைய உச்சபட்ச புகழைப் பெற்றார். அதன் பின்னர் ரஹ்மானின் வரவுக்குப் பின்னரும் 90 கள் மற்றும் 2000களில் கூட சில நல்ல பாடல்கள் அவருக்குக் கிடைத்தன.

இப்போது அவர் வயது மூப்புக் காரணமாக பாடல்கள் பாடுவதைத் தவிர்த்து வருகிறார். அவருக்கு தற்போது வயது 88. சமீபத்தில் அவர் திருப்பதி கோயிலுக்கு சென்று தன்னுடைய முடியைக் காணிக்கையாக செலுத்தினர். இந்நிலையில்தான் சில தினங்களுக்கு முன்னர் மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.

இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் “தமிழ் ரசிகர்களுக்கு என் மேல் தனி அன்பு. பாடல்கள் என்றால் அவர்களுக்கு உயிர். அதனால்தான் கடவுள் என்னை அனுப்பி வைத்திருக்கிறார் போலும். எனக்காக பிராத்தனை செய்து மீட்டுக்கொண்டு வந்த அனைவருக்கும் நன்றி.” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்