எந்த பள்ளிக்கூடத்துல கணக்கு படிச்சீங்க! – மதுவந்தியை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!

Webdunia
வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (09:07 IST)
மத்திய அரசு மக்களுக்கு வழங்கியுள்ள நிவாரண நிதி குறித்து எடக்கு மடக்காக கணக்கு சொல்லிய மதுவந்தி சமூக வலைதளங்களில் பேச்சு பொருளாகியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் அவர்களது அத்தியாவசிய தேவைகளுக்காக மத்திய, மாநில அரசுகள் நிவாரண நிதி உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றன.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஒய்.ஜி.மகேந்திரனின் மகளும், நடிகையுமான மதுவந்தி ”நாடு முழுவதும் ஜன் தன் யோஜனா மூலம் 8 ஆயிரம் கோடி மக்களுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார். மேலும் கணக்கு வழக்கு இல்லாமல் தனக்கு தோன்றிய எண்களை தொகையாக சொல்லி பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள் “இந்திய மக்கள் தொகையே 130 கோடிதான். எந்த பள்ளிக்கூடத்துல கணக்கு படிச்சீங்க?” என கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிரதமர் மோடி விளக்கு ஏற்ற சொன்னபோது மதுவந்தி பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டான நிலையில், தற்போது இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்