கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இயக்குனரின் மகன் டிஸ்சார்ஜ்!

Webdunia
வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (09:00 IST)
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இயக்குனரின் மகன் டிஸ்சார்ஜ்!
பிரபல மலையாள திரையுலகின் இயக்குனரின் மகன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் அந்த வைரஸிலிருந்து முற்றிலுமாக குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார் 
 
பிரபல மலையாளப்பட இயக்குநர் பத்மகுமார். இவர் மம்முட்டி நடித்த படம் உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மகன் ஆகாஷ் கடந்த மார்ச் மாதம் பாரீஸில் இருந்து கேரளா திரும்பினார். அப்போது அவரை தனிமைப்படுத்தி இருக்கும்படி விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தினார்
 
இதனையடுத்து அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து ஆகாஷ் மற்றும் அவரது நண்பர் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்
 
மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக இருவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இது குறித்து மிகவும் நெகழ்ச்சியுடன் இயக்குனர் பத்மகுமார் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது மகன் ஆகாஷ் மற்றும் அவரது நண்பர் எல்தோ மாத்யூ ஆகிய இருவரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர்கள் நர்சுகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்து கொரோனாவிற்கு எதிரான போரில் தங்கள் உயிரையே பணயம் வைத்து பணி செய்ததை நான் நேரில் பார்த்தேன்
 
இதற்கெல்லாம் மேலாக எங்கள் மாநிலத்தின் முதல்வர் பினரயி விஜயன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா மற்றும் எங்கள் மாவட்ட கலெக்டர் சுகாஸ் ஆகியோர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கேரள மாநில அரசு கொரோனாவுக்கு எதிரான போரில் மிக சிறப்பாக செயல்பட்டு வருவது எனக்கு மிகப்பெரிய பெருமையாக இருக்கிறது. அவர்களுக்கு ஒரு பெரிய சல்யூட் என்று குறிப்பிட்டுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்