பிசாசு 2 படத்தில் இணைந்து பணியாற்றிய மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இப்போது ஒரு முழுநீளப் படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார் . இந்த படம் பிப்ரவரியிலேயே தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் தொடங்கப்படவில்லை. இப்போது முன் தயாரிப்புப் பணிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவலின் படி அக்டோபர் மாதத்தில் இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் தொடங்கி நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.
படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.