ஜவான் ப்ளாக்பஸ்டர் ஆனாலும் வருத்தத்தில் இருக்கும் ஷாருக்… பட்ஜெட்டை இழுத்துவிட்ட அட்லி!

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2023 (07:59 IST)
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. இந்த படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

ஷாருக் கானின் சமீபத்தைய படமான கங்குவா மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் ஜவான் படத்தின் வசூல் பதான் வசூல் சாதனையை முறியடித்து வருகிறது. இப்போது 1000 கோடி ரூபாய் அளவுக்கு இந்த படம் வசூலித்து வருகிறது. இதன் மூலம் தொடர்ந்து ஜவான் திரைப்படம் இந்த ஆண்டின் ப்ளாக்பஸ்டர்களில் ஒன்றாகியுள்ளது.

ஜவான் திரைப்படம் இப்படி வசூல் மழை பொழிந்தாலும், இயக்குனர் அட்லி மேல் வருத்தத்தில் இருக்கிறாராம் ஷாருக். அதற்குக் காரணம் சொன்ன பட்ஜெட்டை விட 50 சதவீதம் அதிக தொகையை இழுத்து விட்டாராம் அட்லி. வழக்கமாக அட்லி மேல் எல்லா தயாரிப்பாளர்களும் வைக்கும் குற்றச்சாட்டுதான் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்