விடுதலை 2 படத்தில் இணைந்த பிரபல நடிகர்

வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (17:50 IST)
கடந்த  மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம்   ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

தற்போது விடுதலை பட 2 ஆம் பாகம் உருவாகி வருகிறது.  இப்படத்திற்கான  ஷூட்டிங் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற இடத்தில் தொடங்கி நடைபெற்றது.

இரண்டாம் பாகத்தில் சூரி சம்மந்தப்பட்ட காட்சிகள் நிறைவடைந்த நிலையில்,  சிறுமலையில் நடந்த ஷூட்டிங்கில் மழை குறுக்கிட்டு தாமதப்படுத்தியதால் இப்போது திருவள்ளூருக்கு ஷூட்டிங்கை மாற்றியுள்ளதாக தகவல் வெளியானது.

ஏற்கனவே இப்படத்தில்,  விஜய்சேதுபதி, மஞ்சு வாரியார்  நடித்து வரும் நிலையில், வெற்றிமாறன் தயாரிப்பில் விசாரணை என்ற படத்தில் நடித்திருந்த தினேஷ் இப்படத்திலும்  இணைந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்