அடுத்த படத்துக்கு வேறு இசையமைப்பாளர் தேடுகிறாரா மிஷ்கின்?

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (17:43 IST)
இயக்குனர் மிஷ்கின் இப்போது இயக்கி வரும் பிசாசு 2 படத்தில் கார்த்திக் ராஜா இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. அந்த படத்தில் பிசாசு எதிர்மறை கதாபாத்திரத்தில் உருவாக்காமல் தேவதையை போல உருவாக்கியிருந்தார் மிஷ்கின். அதனால் அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் மிஷ்கின். இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக கார்த்திக் ராஜா மிஷ்கின் படத்துக்கு இசையமைக்க உள்ளார். மற்றொரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்கும் பூர்ணா நடித்து வருகிறார்.

இந்த படத்தில் மிஷ்கினின் திறனைப் பார்த்து வியந்த தயாரிப்பாளர் முருகானந்தம் மீண்டும் அவரோடு ஒரு படத்தில் பணிபுரிய ஆர்வம் தெரிவித்துள்ளார். மிஷ்கின் இயக்கும் அந்த படத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் விதார்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்களாம்.

இந்நிலையில் பிசாசு 2 படத்தில் பணியாற்றிய கார்த்திக் ராஜாவோடு இந்த படத்திலும் மிஷ்கின் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இப்போது வேறு ஒரு புதிய இசையமைப்பாளரை தேடி வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்