மிஷ்கின் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா… மீண்டும் பிசாசு 2 தயாரிப்பாளோடு கூட்டணி!

செவ்வாய், 12 அக்டோபர் 2021 (10:33 IST)
மிஷ்கின் இப்போது பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து அவரின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. அந்த படத்தில் பிசாசு எதிர்மறை கதாபாத்திரத்தில் உருவாக்காமல் தேவதையை போல உருவாக்கியிருந்தார் மிஷ்கின். அதனால் அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் மிஷ்கின். இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக கார்த்திக் ராஜா மிஷ்கின் படத்துக்கு இசையமைக்க உள்ளார். மற்றொரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்கும் பூர்ணா நடித்து வருகிறார்.

இந்த படத்தில் மிஷ்கினின் திறனைப் பார்த்து வியந்த தயாரிப்பாளர் முருகானந்தம் மீண்டும் அவரோடு ஒரு படத்தில் பணிபுரிய ஆர்வம் தெரிவித்துள்ளார். மிஷ்கின் இயக்கும் அந்த படத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் விதார்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்களாம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்