லப்பர் பந்து படம் மிகச்சிறப்பான படம்… பாராட்டிய மோகன்லால்!

vinoth
புதன், 25 டிசம்பர் 2024 (13:16 IST)
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக இணைந்துள்ளது. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படம் திரையரங்குகள் மூலமாக மட்டுமே 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கும் என சொல்லப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் வெளியான பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாக லப்பர் பந்து அமைந்துள்ளது.

இந்நிலையில் தன்னுடைய பர்ரோஸ் படத்தின் ப்ரமோஷனுக்காக சென்னை வந்திருந்த மோகன்லால் லப்பர் பந்து படத்தைப் பாராட்டியுள்ளார். அதில் “நான் சமீபத்தில் லப்பர் பந்து படம் பார்த்தேன்.  எனக்கு அந்த படம் ரொம்ப பிடிச்சிருந்தது. சின்ன விஷயத்த மிகத் திறமையா சொல்லி இருந்தாங்க” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்