ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘டீசர்’ திரைப்பட ரிலீஸ் எப்போது?.. வெளியான தகவல்!

vinoth

சனி, 7 டிசம்பர் 2024 (12:55 IST)
ஹேண்ட்ஸம் இளம் நடிகராக கோலிவுட் சினிமாவின் பெண்கள் ரசிகர்களை அடியோடு கவர்ந்திழுத்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் அமலா பால் நடிப்பில் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளான சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன் பிறகு பொறியாளன் திரைப்படத்தின் மூலம் ஹீரோவானார். தொடர்ந்து வாய்ப்பில்லாமல் இருந்து வந்த அவர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துக்கொண்டு பெரும் பிரபலமானார். மேலும் பியார் பிரேமா காதல் மற்றும் தாராள பிரபு திரைப்படம் அவரது கெரியரில் மைல் கல்லாக அமைந்தது. சமீபத்தில் அவர் நடித்த பார்க்கிங் மற்றும் லப்பர் பந்து ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன.

அடுத்து அவர் நடிப்பில் ஆயிரம் கோடி வானவில் மற்றும் டீசல் ஆகிய படங்கள் உருவாக்கத்தில் உள்ளன. இதில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் டீசல் படத்தின் ஷூட்டிங் 100 நாட்களுக்கு நடத்தப்பட்டுள்ளது. இந்த படத்தை எடுக்க 20 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், இது ஹரிஷ் கல்யாணின் மார்க்கெட்டை விட பல மடங்கு அதிக தொகை என்றும் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த இந்த படம் ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வராத பட்சத்தில் அந்த தேதியில் ரிலீஸ் செய்யலாம் என்றும் அப்படி விடாமுயற்சி பொங்கலுக்கு வந்தால் ஜனவரி இறுதியில் ரிலீஸ் செய்யலாம் என்றும் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்