தயாரிப்பு நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டாரா ‘லப்பர் பந்து’ இயக்குனர் தமிழரசன்?

vinoth

திங்கள், 25 நவம்பர் 2024 (08:27 IST)
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக இணைந்துள்ளது. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படம் திரையரங்குகள் மூலமாக மட்டுமே 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் இந்த படத்தின் பிறமொழி ரீமேக் உரிமைக்கு மிகப்பெரிய அளவில் டிமாண்ட் உருவாகியுள்ளது. அதனால் தயாரிப்பு நிறுவனம் ஒரு மிகப்பெரிய தொகைக்கு ரீமேக் உரிமையை விற்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாம்.

ரீமேக் உரிமையில் 40 சதவீதம் இயக்குனருக்குக் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் ரீமேக் தொகையை குறைவாக சொல்லி, அதில் 40 சதவீதத்தைத் தருவதாக இயக்குனர் தமிழரசனிடம் கூறியுள்ளதாம். ஆனால் உண்மையானத் தொகையை தெரிந்துகொண்ட இயக்குனர் இதுசம்மந்தமாக வாக்குவாதம் செய்ய ஒரு கட்டத்தில் எனக்கு எந்த பணமும் வேண்டாம் என்று இலவசகமாகவே ரீமேக் தொகையைக் கொடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்