வானதியை தொடர்ந்து பேச அனுமதிக்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டமன்றத்தில் குரல் கொடுத்த போது, பாஜக எம்எல்ஏக்காக அதிமுகவினர் பேசுகின்றனர் என சபாநாயகர் கூறிய போது, அதற்கு வானதி அமைச்சர்களுக்கு ஆதரவாக சபாநாயகர் பேசும் போது எனக்காக அதிமுக எம்எல்ஏக்கள் பேசக்கூடாதா என கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டமன்றத்தில் இன்று பாஜக எம்எல்ஏ வானதி பேசும்போது, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்றும், குற்ற செயல்கள் அதிகரிப்பால் அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் சூழல் மாறிக்கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.
அதற்கு துரைமுருகன் பேசிய போது, அனைத்து இடங்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருப்பார்கள், எந்த ஆட்சியாக இருந்தாலும் தவறுகள் இருக்கும், எல்லா இடத்திலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளது என்றார்.
அதற்கு முதல்வர் பதிலளித்து பேசியபோது, தமிழகத்தில் மதவாத சக்திகள் இருக்கிறது என பொதுவாக கூறக்கூடாது, காஷ்மீரில் நடந்த சம்பவம் தமிழகத்தில் நடைபெறாது என்று தெரிவித்தார்.
அப்போது சபாநாயகர், தமிழகத்தில் மதம் சார்ந்த எந்த பிரச்சனையும் கிடையாது, மதம் சார்ந்த எந்த புகார் கொடுத்தாலும் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
அதன் பின்னர் வானதி சீனிவாசனை பேச அனுமதிக்க வேண்டும் என அதிமுகவினர் குரல் எழுப்பிய போது, அதிமுக பக்கம் இருந்து சத்தம் வருகிறது என சபாநாயகர் கேள்வி எழுப்பினார்.
அப்போது, அமைச்சர்களுக்கு ஆதரவாக சபாநாயகர் பேசும்போது, எனக்காக அதிமுகவினர் பேசக்கூடாதா என வானதி கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.