வெற்றிமாறன் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் திரௌபதி படம் குறித்து பேசியிருந்த நிலையில் அது குறித்து மோகன் ஜி தனது எதிர்ப்பை பதிவை செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் தற்போதைய ட்ரண்ட் செட்டர் இயக்குனர் வெற்றிமாறன் தற்போது உருவாகியுள்ளார். கடைசியாக அவர் இயக்கிய அசுரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அரசியல் ரீதியான சலசலப்பை உருவாக்கியது. இந்நிலையில் சமீபத்தில் வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு, விகடன் இணையதள சேனல் அவரிடம் நேர்காணல் ஒன்றை செய்தது.
அதில் திரைப்படங்களின் அரசியல் குறித்து பேசிய வெற்றிமாறன் ‘ரஞ்சித் உள்ளிட்டோர் எடுக்கும் தலித் அரசியல் படங்களுக்கு எதிராக இப்போது திரௌபதி போன்ற படங்கள் வர ஆரம்பித்துள்ளன. இது சமூகத்தில் விவாதத்தை உருவாக்க ஆரம்பித்துள்ளது. விவாதங்கள் நடப்பது நல்லதுதான் ‘ எனக் கூறியிருந்தார். இதனால் பலரும் திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜியைக் கலாய்க்க ஆரம்பித்தனர்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக மோகன் தன் சமூகவலைதள பக்கத்தில் ‘பிழைப்பு கெட்டு போச்சின்னு என்ன கதறு கதறுறானுங்க... மிச்சம் மீதி இருக்க பிழைப்பும் அடுத்த வருசம் பிச்சிக்கிட்டு போக தான் போகுது. நீ பார்க்க தான் போற இளநி.. உழைத்து சாப்பிட தயாராகவும்..’ என ஆவேசமாக கூறியுள்ளார்.