’மாஸ்டர்’ படத்தின் முக்கிய அறிவிப்பு: பரபரப்பில் விஜய் ரசிகர்கள்

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (17:25 IST)
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை ஒவ்வொரு விஜய் ரசிகரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படம் பொங்கல் தினத்தில் வெளியாக வேண்டும் என்று அனைத்து ரசிகர்களும் விருப்பம் தெரிவித்த தோடு ’மாஸ்டர்’ பொங்கல் என்ற ஹேஷ்டேக்கையும் வைரலாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த படம் குறித்த ஒரு அறிவிப்பும் வெளிவந்துள்ளது. ’மாஸ்டர்’ தெலுங்கு வெர்ஷனில் இடம்பெற்ற சிட்டி ஸ்டோரி என்ற பாடல் நாளை மதியம் 12.15 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே பாடல் தமிழில் குட்டி ஸ்டோரி என்ற தலைப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது
 
விஜய், விஜய்சேதுபதி மாளவிகா, மோகனன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையில் உருவாகி இந்த படம் 2021ஆம் ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்