தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் நெப்போலியன். அவர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். குணச்சித்திர வேடங்களில் நடித்த அவர் ஒரு கட்டத்தில் தனது மகனின் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவில் இப்போது வசித்து வருகிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தான் விஜய்யோடு பேசுவதில்லை என்றும் அவர் படங்களைப் பார்ப்பதில்லை என்றும் கூறியிருந்தார்.
விஜய்யுடன் போக்கிரி படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் நெப்போலியன். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது விஜய்யுடன் தனக்கு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும், இந்த படத்தில் பிரபுதேவாவுக்காகவே நடித்தேன் என்றும் மேலும் நெப்போலியன் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பேச்சு இணையத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இப்போது அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் அவர் அந்த பிரச்சனைக்கு சூழ்நிலையும் விஜய்யின் அனுகுமுறையுமே காரணம். அவர் நினைத்திருந்தால் பிரச்சனை வராமல் தடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளார். ஆனால் இனிமேல் விஜய் என்னை அழைத்து அவர் படத்தில் நடிக்க சொன்னால் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.