நானும் கைது செய்யப்பட்டேனா? ஹ்ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி விளக்கம்!

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (17:07 IST)
மும்பையில் சமீபத்தில் இரவு கிளப் ஒன்றில் சுரேஷ் ரெய்னா உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் ஒருவருமான சுரேஷ் ரெய்னா மும்பையிலுள்ள கிளப் ஒன்றில் கைது செய்யப்பட்டார் என்று செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகாராஷ்டிரா மாநிலத்தின் கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறியதாக அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் சில மணி நேரங்களில் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில் சுரேஷ் ரெய்னா கைது சம்பவம் குறித்து அவரது தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

இந்த கைதின் போது ஹ்ருத்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூசனும் கைது செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதை அவர் மறுத்துள்ளார். அவர் தரப்பில் ‘நெருங்கிய நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விருந்துக்காக சென்றிருந்தேன். அப்போது 3 மணியளவில் அங்கு போலீஸ் அதிகாரிகள் வந்தனர். அவர்களிடம் கிளப் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் நாங்கள் மூன்று மணிநேரம் காக்க வைக்கப்பட்டோம். பிறகு ஒரு வழியாக 6 மணிக்குதான் வீட்டுக்கு அனுப்பப் பட்டோம். ஊடகங்களில் வரும் கைது தொடர்பான செய்திகள் அனைத்தும் உண்மைக்கும் புறம்பானவை.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்