வரும் ஞாயிறு அன்று ‘மாஸ்டர்’ படத்தின் ஸ்பெஷல் காட்சி: நெல்லை தியேட்டர் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (22:11 IST)
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக கடந்த 13ஆம் தேதி வெளியானது என்பது தெரிந்ததே. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தியேட்டர் பக்கமே வராமல் இருந்த பார்வையாளர்களை தியேட்டருக்கு வரவழைத்தது இந்த படம் என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ‘மாஸ்டர்’ படம் வெளியாகி 25 நாட்களாகியதை அடுத்து நெல்லையில் உள்ள ராம் முத்துராம் திரையரங்கம் வரும் ஞாயிறு காலை ஒன்பது முப்பது மணிக்கு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு காட்சிகள் சில ஸ்பெஷல் வீடியோக்களும் பாடல்களும் திரையிடப்படும் என ராம் முத்துராம் சினிமா நிர்வாகம் தெரிவித்துள்ளது 
 
இந்த காட்சிக்கு டிக்கெட் புக் செய்ய இப்பொழுதே தளபதி விஜய்யின் ரசிகர்கள் முண்டியடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் படங்கள் எப்போதுமே நெல்லை ராம் முத்துராம் சினிமாவில் மிகவும் ஆர்ப்பாட்டமாக கொண்டாடப்படும் என்பது தெரிந்ததே

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்