மாஸ்டர் வெற்றியால் பல மடங்கு உயர்ந்த விஜய் சேதுபதியின் சம்பளம்!

வியாழன், 4 பிப்ரவரி 2021 (10:32 IST)
விஜய் சேதுபதி நடிக்கும் வெப் தொடருக்கான அவரது சம்பளம் வியக்க வைக்கும் அளவுக்கு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி பல இடங்களில் விஜய்யை விட அதிகமாக ஸ்கோர் செய்தார். இதனால் விஜய் ரசிகர்களே கூட விஜய் சேதுபதியின் புகழ்பாட தொடங்கினர். இதனால் மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் விஜய் சேதுபதி தாறுமாறாக சம்பளத்தை ஏற்றிவிட்டாராம்.

இந்தியில் அவர் நடிக்க வெப் சீரிஸில் கதாநாயகனாக நடிக்கும் ஷாகித் கபூரை விட அதிக சம்பளம் பெறுகிறாராம் விஜய் சேதுபதி.  இது கோலிவுட் தயாரிப்பாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்