அப்படி இருந்த காட்சிகளிலும் அவருக்கென்று பெரிதாக நடிப்பதற்கு பெரிதாக எந்த வாய்ப்புகளும் இல்லை. இந்நிலையில் இடைவேளைக்கு முன்பாக அவர் விஜய்யிடம் கோபமாக பேசும் காட்சி பலராலும் கேலி செய்யப்பட்டது. இப்போது அதை வைத்து மீம்ஸ்களும் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் அந்த மீம்ஸ்களை தான் பார்த்ததாகவும் அதைப் பார்த்த போது சிரிப்பு வந்தது எனவும் மாளவிகா தெரிவித்துள்ளார்.