நாளை வெளியாகிறதா மாரி செல்வராஜ்& உதயநிதி ஸ்டாலினின் அடுத்த பட அறிவிப்பு?

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (10:52 IST)
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் வடிவேலு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் சேலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மாரி செல்வராஜின் இரண்டு படங்களும் தென் தமிழகத்தை பின்புலமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கூடிய விரைவில் படப்பிடிப்பு ஏற்காட்டில் தொடங்க உள்ளதாக சொலல்ப்படுகிறது. விக்ரம் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள பஹத் பாசில் நேரடியாக இந்த படத்தில் நடிக்க கிளம்ப உள்ளார். இந்நிலையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் ‘நாளை காலை 10 மணிக்கு மிகப்பெரிய அறிவிப்பு வெளியாக உள்ளது’ என தெரிவித்துள்ளார். இதனால் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ  அறிவிப்பு நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்