ஒரு எழுத்தாளருக்காக ஒன்றுசேர்ந்த மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்கள்… மனோரதங்கள் டிரைலரை வெளியிட்ட கமல்!

vinoth
செவ்வாய், 16 ஜூலை 2024 (17:37 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே மலையாள சினிமா மிகவும் ஆரோக்யமான போக்கில் சென்று கொண்டிருக்கிறது. அங்கே நல்ல கதையம்சம் உள்ள படங்களும் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களில் வெளியான பிரேமலு, ப்ரமயுகம், மஞ்சும்மள் பாய்ஸ், ஆடு ஜீவிதம், வர்ஷங்களுக்கு ஷேஷம் மற்றும் ஆவேஷம் ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளன. இந்த படங்கள் கேரளா தாண்டியும் பிற மொழி ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் இப்போது மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களான மோகன் லால், மம்மூட்டி, பஹத் பாசில், பிஜு மேனன் உள்ளிட்ட பலர் ஒன்றிணைந்து மனோரதங்கள் என்ற ஆந்தாலஜி படம் ஒன்றில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலரை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

இந்த ஆந்தாலஜியின் சிறப்பு என்னவென்றால் மலையாள சினிமாவின் முதுபெரும் எழுத்தாளரான எம் டி வாசுதேவன் நாயரின் 8 கதைகளை எடுத்து அதை 8 குறும்படங்களாக எடுத்து அதை ஒரு ஆந்தாலஜியாக இணைத்துள்ளார். திரைக்கதை ஆசிரியராகவும் வெற்றி பெற்ற பல படங்களின் திரைக்கதையை எழுதியுள்ள எம் டி வாசுதேவன் நாயரின் கதைகளுக்கு உயிர்கொடுக்கும் விதமாக உருவாகியுள்ள இந்த 8 கதைகளையும் 8 இயக்குனர்கள் இயக்கியுள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஜி5 ஓடிடி தளத்தில் நேரடியாக ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்