கடந்த ஆண்டு மலையாளத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் டோவினோ தாமஸ் நடித்த 2018. கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஒட்டி இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஜூட் ஆண்டனி. இந்த படம் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து மலையாள சினிமாவின் அதிகபட்ச வசூல் செய்த படமாக உருவாகியுள்ளது.
இதுவரை அவர் இயக்கும் படம் தொடர்பான தகவல்கள் வெளியாகாத நிலையில் இப்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவர் இயக்கும் அடுத்த படத்தில் சிம்பு மற்றும் மோகன் லால் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்க இருந்த திரைப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், சிம்புவின் அடுத்த படமாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது.