வேட்டையனுக்குப் பிறகு மீண்டும் இணைகிறதா லைகா & ரஜினிகாந்த் கூட்டணி?

vinoth
வெள்ளி, 18 அக்டோபர் 2024 (09:42 IST)
ரஜினி நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸானது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையிக், எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவில் வேட்டையன் படம் உருவானது.

படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸான நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களைக் கூறினர். குறிப்பாக படத்தில் பல இடங்களில் லாஜிக் இல்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் மாஸான காட்சிகளில் லாஜிக் இல்லை என்றாலும், ரஜினியின் முந்தைய படங்களில் இருந்த ஒரு ஃபயர் சுத்தமாக இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் பெருமழை காரணமாகவும் வேட்டையன் வசூல் இரண்டு நாட்கள் பாதிக்கப்பட்டது.

ஆனாலும் படம் இதுவரை 300 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்தை சந்தித்து படத்தின் வெற்றிச் செய்தியை பகிர்ந்துகொண்டது லைகா நிறுவனம். அப்போது வேட்டையன் படத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு படம் தங்கள் நிறுவனத்துக்கு நடித்துத் தரவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு ரஜினி சம்மதிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்