அஜித்தை மகிழ்விக்க கோடிகளை வாரியிரைக்கும் லைகா நிறுவனம்!

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (15:53 IST)
அஜித்தின் துணிவு படத்துக்கான ப்ரமோஷன் பணிகளை வெளிநாட்டில் பிரம்மாண்டமாக செய்து வருகிறது லைகா நிறுவனம்.

அஜித் படங்களுக்கு பெரியளவில் ப்ரமோஷன் பணிகள் நடக்காது. ஆனாலும் அவர் படங்களுக்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கும். ஆனால் இந்த முறை துணிவு படத்துக்கு வெளிநாடுகளில் அதிகளவில் ப்ரமோஷன்களை செய்கிறது வெளிநாட்டு உரிமைகளைக் கைப்பற்றியுள்ள லைகா நிறுவனம்.

துபாயில் ஸ்கை டைவிங் செய்யும் ஒருவர் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து அந்தரத்தில் துணிவு படத்தின் போஸ்டரை வெளியிட்ட காட்சியை லைகா நிறுவனம் பகிர்ந்துள்ளது. அதுபோல டிசம்பர் 31 ஆம் தேதி படத்தின் டிரைலரை புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ஒளிபரப்ப உள்ளது.

அஜித்தை வைத்து அடுத்த படத்தை தயாரிப்பதால் லைகா நிறுவனம் அந்த படத்தின் வியாபாரத்தையும் கணக்கில் கொண்டு விளம்பரத்துக்காக அதிக தொகையை செலவு செய்வதாக சொல்லப்படுகிறது. வெளிநாட்டில் இவ்வளவு ப்ரமோஷன்கள் நடந்தாலும், இந்தியாவுக்குள் பெரிதாக எந்த பரமோஷனும்  நடக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்