மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா, ஜெயம்ரவி உள்ளிட்ட பலர் நடித்து வெளியான சரித்திர படம் பொன்னியின் செல்வன் பாகம் 1. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி உருவான இந்த படம் தமிழ் ரசிகர்கள் இடையே பெரும் வெற்றி பெற்றது.