பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே பல கோடிகளை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இப்போது கிட்டத்தட்ட தன்னுடைய திரையரங்க காலத்தை நிறைவு செய்துள்ள லவ் டுடே திரைப்படம் உலகளவில் சுமார் 70 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இதனால் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாகபஸ்டர் படமாக லவ் டுடே அமைந்துள்ளது.
இதையடுத்து ப்ரதீப் நடிப்பு மற்றும் இயக்கம் என இரண்டிலும் கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் கட்டமாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார். அடுத்து தன் இயக்கத்தில் தானே ஒரு படத்திலும் நடிக்கவும் உள்ளார். இதுமட்டும் இல்லாமல் மீண்டும் ஜெயம் ரவி நடிப்பில் மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.