லவ் டுடே படத்தை இந்தியிலும் தயாரிக்கிறதா ஏஜிஎஸ் நிறுவனம்?

வியாழன், 23 பிப்ரவரி 2023 (15:23 IST)
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே பல கோடிகளை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இப்போது கிட்டத்தட்ட தன்னுடைய திரையரங்க காலத்தை நிறைவு செய்துள்ள லவ் டுடே திரைப்படம் உலகளவில் சுமார் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இதனால் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாகபஸ்டர் படமாக லவ் டுடே அமைந்துள்ளது. இதையடுத்து மற்ற மொழிகளில் இந்த படத்தை ரீமேக் செய்ய ஆர்வம் அதிகமாக தயாரிப்பாளர்கள் மத்தியில் உள்ளது. அதையடுத்து இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தி ரீமேக் உரிமையை பேந்தம் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழில் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமும் இணைத் தயாரிப்பாளராகவும் செயல்பட உள்ளதாம். ஏற்கனவே இதுபோல கைதி மற்றும் சூரரைப் போற்று ஆகிய திரைப்படங்களின் ரீமேக்குகளிலும் தமிழில் தயாரித்த நிறுவனங்கள் இணைத் தயாரிப்பாளர்களாக செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்