விஷாலை சந்தித்த லோகேஷ் கனகராஜ்… அப்ப தளபதி 67-ல நடிப்பது உறுதியா?

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (09:23 IST)
நடிகர் விஜய் தற்போது நடித்துவரும் வாரிசு திரைப்படம் இன்னும் சில தினங்களில் முழுவதும் நிறைவடையும் என சொல்லப்படுகிறது. இதை முடித்துவிட்டு அவர் உடனடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தை தொடங்க உள்ளார்.

விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது.

இந்த படத்தில் முதலில் வில்லனாக நடிக்க பிருத்விராஜிடம் ஒப்புக்கொண்டதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவர் அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டதாகவும், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஷாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இதையடுத்து இப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்துக்கே சென்று விஷாலை சந்தித்துள்ள வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இதனால் விஷால் அந்த படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்