வெற்றிக்களிப்பில் ஃபாரின் டூர்: கலக்கும் மாஸ்டர் டீம்!!

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (10:15 IST)
மாஸ்டர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக லோகேஷ் , அனிருத், ஆகியோர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுலா. 

 
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த 13 ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்த படம் வெளியான 16 நாட்களில் ஓடிடியில் வெளியாகியுள்ளது. 
 
மாஸ்டர் படம் வெற்றி படமாகவே கருத்தப்படுகிறது. ஏனென்றால் ஓடிடியில் வெளியான பின்னரும் தியேட்டரில் இந்த படம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், மாஸ்டர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக லோகேஷ் கனகராஜ், அனிருத், தயாரிப்பாளர் ஜெகதீஷ் ஆகியோர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு எடுத்த புகைப்படங்களை மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்