பிரபல கதாநாயகிக்கு தம்பியாக நடிக்கும் குக் வித் கோமாளி புகழ்!

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (09:53 IST)
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான புகழ் இப்போது அருண் விஜய்யின் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்துக்கொண்டிருக்கும் புகழ் காமெடியை விரும்பாதவர்கள் யாரும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. 'குக் வித் கோமாளி புகழ் ஏற்கனவே அஜித் நடித்து வரும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் சமீபத்தில் அவர் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இப்போது அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்நிலையில் அந்த படத்தில் அவர் நாயகி பிரியா பவானி சங்கருக்கு தம்பியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இருவருமே விஜய் டி வி மூலமாக தங்களுக்கான சினிமா வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்