விஜய்யின் ’’மாஸ்டர் ’’பட லாபம் மட்டும் இத்தனை கோடியா???

திங்கள், 1 பிப்ரவரி 2021 (16:44 IST)
பொங்கலுக்கு வெளியான மாஸ்டரால் திரைத்துறை மட்டுமல்ல ஒட்டுமொத்த தியேட்டர் அதிபர்கள், பாணியாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே இப்படம்  லாபம் மட்டும் ரூ.100 கோடி கிடைத்துள்ளதாகத் தகவல்வெளியாகிறது.

கடந்த 2020 ஏப்ரல் மாதம் ரிலீஸாகியிருக்க வேண்டிய மாஸ்டர் படம் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தியேட்டர்களில் ரிலீஸாகி பெரும் வெற்றிப் பெற்றது.

இப்படத்தின் வசூல் உலகளவில் பெரும் சாதனை நிகழ்த்தியுள்ளது. ரூ.200 கோடி கிளப்பில் விஜய்யின் மாஸ்டர் இணைந்துள்ளது.

இந்நிலையில், மற்ற ஹீரோக்களும் விஜய்யைப் பின்பற்றி தங்களின் படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய முன்வந்துள்ளனர்.

நீண்ட காலத்திற்குப் பிறகு மாஸ்டர் படம் ரிலீஸானாலும் பெரும் வெற்றி பெற்றுள்ளதால் மொத்தப் படக்குழுவும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

மீண்டும் விஜய், லோகேஷ் கனகராஜ் இணைந்து இன்னொரு பிரமாண்ட படம் உருவாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இதற்குத்தான் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

இந்நிலையில் மாஸ்டர் படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

அதவது விஜய்யின் மாஸ்டர் படத்தின் மொத்த பட்ஜெட் 150 கோடி ரூபாய் எனவும், இப்படத்திற்கு கிடைத்துள்ள மொத்த வருவாய் ரூ.332 ஆகும்.  எனவே இந்த வருவாயின அடிப்படையில் பார்த்தாம் மாஸ்டர் படத்திற்கு சுமார் ரூ.100 கோடி முதல் ரூ.120 கோடி வரை லாபம் மட்டும் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

விஜய்யின் மாஸ்டர் படம் ஹிந்தி ரீமேக் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்