ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடியை திருமணம் செய்கிறாரா நடிகை சுஷ்மிதா சென்?

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (21:20 IST)
ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடியை திருமணம் செய்கிறாரா நடிகை சுஷ்மிதா சென்?
முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடியை நடிகை சுஷ்மிதாசென் திருமணம் செய்து கொள்வதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது
 
58 வயதான முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி மற்றும் 46 வயதான  நடிகை சுஷ்மிதாசென் ஆகிய இருவரும் தற்போது டேட்டிங் செய்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
நடிகை சுஷ்மிதாசென் கடந்த 1994-ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றவர் என்பதும் இவர் தமிழ் உள்பட பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
தமிழில் இவர் நடித்த ரட்சகன் என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்