லேடு சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்ற நயன்தாரா… குஷ்பூவின் கமெண்ட்!

vinoth
வெள்ளி, 7 மார்ச் 2025 (10:45 IST)
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நயன்தாரா. அதே போல தனிக் கதாநாயகியாகவும் அவர் சில ஹிட்ஸ்களைக் கொடுத்து தனக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் மற்றும் திரை உலகம் சமீபகாலமாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற அடைமொழி கொடுத்து அழைத்து வந்தனர். இது சம்மந்தமாக நயன்தாரா மேல் விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் தனது எக்ஸ் பக்கத்தில், தனக்கு இந்த பட்டம் வேண்டாம் எனவும், ‘நயன்தாரா’ என்பதே தனது மனதிற்கு மிக அருகிலுள்ள பெயர் எனவும், நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

நயன்தாராவின் இந்த முடிவை நடிகை குஷ்பூ பாராட்டி பேசியுள்ளார். அதில் “நயன்தாராவின் இந்த முடிவு சரியானது. எங்கள் காலத்தில் எல்லாம் நடிகைகளுக்குப் பட்டம் கொடுத்ததில்லை. சுப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி சார் மட்டும்தான். மற்ற யாருக்கும் பட்டம் கொடுக்காமல் அவர்கள் பெயரை சொல்லி அழைத்தாலே சிறப்பாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்