நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் நயன்தாராவின் ‘டெஸ்ட்’.. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth

வியாழன், 6 மார்ச் 2025 (14:20 IST)
தமிழ்ப்படம், காவியத்தலைவன், ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த ஒய்நாட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும்  டெஸ்ட் என்ற படத்தில் சித்தார்த், மீரா ஜாஸ்மின் மற்றும் மாதவன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் கிரிக்கெட் சம்மந்தப்பட்ட கதைக்களம் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சில முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டன. ஷூட்டிங் முடிந்தும் பல மாதங்கள் ரிலீஸாகாமல் இருந்த இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த படம் பார்வையாளர்களுக்குக் கிடைக்கும்.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nikil Murukan (@onlynikil)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்